tamilnadu

போதை மறுவாழ்வு மையங்களை மேம்படுத்த முடிவு

சென்னை:
மாநிலம் முழுவதும் உள்ள போதை மறுவாழ்வு மையங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேசன் லிமிடெட் (டாஸ்மாக்)நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் போதை மறுவாழ்வு மையங்கள் பொதுவாக அரசு  மருத்துவமனைகளுக்குள் ஒரு வார்டில் அமைந்துள்ளன. இதனை மேம்படுத்த ரூ.3.65 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றுஅரசு அதிகாரி  ஒருவர் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட பணம் கட்டில்கள், உபகரணங்கள்  வாங்குவதற்கும் புதிய வார்டுகளை நிர்மாணிப்பதற்கும் பயன்படுத்தப்படும். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், மனநலமருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர் களை போன்ற பணியாளர்களை அதிகப்படுத்துவதையும் அங்கு வரும் மக்கள்  ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் பெறுவதை உறுதிப்படுத்த  விரும்புகிறோம். இது தொடர்பான அரசாங்க உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
 

;