கியூபா நிதிக்கு பிஞ்சு உதவிக்கரம்
காஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஹர்ஷ் (வயது 6) கியூபா நிதிக்கு தனது உண்டியல் சேமிப்பு தொகையான 2278 ரூபாயை சனிக்கிழமையன்று சிபிஎம் மாவட்டச்செயலாளர் கே. நேருவிடம் வழங்கினார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் டி. ஸ்ரீதர் உடனிருந்தார்.
ஆசிரியருக்கு கொலை மிரட்டல்: தந்தை கைது
கிருஷ்ணகிரி, ஆக.9- கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள சாலூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வேடியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வேலாயுதம் (45) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக வேலாயுதமும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வேலா யுதம் பள்ளிக்குச் சென்று தனது மகள்களைப் பார்க்க அனுமதி கேட்டபோது, தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.