tamilnadu

img

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மரணத்திற்கு சிபிஎம் இரங்கல்

சென்னை:

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மரணத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் ஆர்.வெற்றிவேல் கொரோனா தொற்று காரணமாகதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார் என்றசெய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அ.ம.மு.க.-விற்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.