சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான மானியக் கோரிக்கை நோட்டீஸ்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் நாகை மாலி, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் திங்களன்று சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து அளித்தனர். அப்போது, கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த நாகை மாலியிடம் அவர் நலம் விசாரித்தார்.