tamilnadu

img

சிபிஎம் தேர்தல் நிதி...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதிக் குழு சார்பில் தேர்தல் நிதி ரூ 5 லட்சத்து 2 ஆயிரத்தை பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் 11 மையங்களில் வழங்க மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி, நிர்வாகிகள் சி.அரி, எஸ்.அமல வெற்றி ராஜன், பி.சேகர், எல்.உமா, ஆர்.மோகன், ஜி.நித்தியராஜ், எஸ்.கார்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டம், திருவொற்றியூர்- எண்ணூர் பகுதிக் குழு சார்பில் தேர்தல் நிதி 6 லட்ச ரூபாயை பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் வழங்க அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.