இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் எஸ்.சுதாகர் ரெட்டியின் மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் எஸ். சுதாகர் ரெட்டி நேற்று இரவு உடல் நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவின் சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.
விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு விவசாய தொழிலாளர்களின் நலனுக்காக நாடு தழுவிய அளவில் அரும்பாடுபட்டவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும், அதற்கு அடித்தளமாக ஏராளமான ஊழியர்களை உருவாக்கிய தலைவர் அவர். அவரை இழந்து வாடும் அவருடைய துணைவியார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.