71-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்நாடு முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு :
“திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் 71-வது பிறந்த தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது நெஞ்சார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
ஒன்றிய பாஜக அரசின் பாசிச பாணி எதேச்சதிகாரத்தை எதிர்த்தும், மதச்சார் பின்மைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் கூட்டாட்சி கோட்பாட்டிற்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் தமிழக முதல்வர் உரத்துக் குரல் கொடுத்து வருகிறார்.
இந்திய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கியமான பங்கினை ஆற்றி வருகிறார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டி லும் இந்திய அளவிலும் மதச்சார்பற்ற சக்தி களின் வெற்றியை உறுதி செய்வதில் அவரு டைய பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மக்கள் பணியை மென்மேலும் தொடர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது”.
இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கே.பால கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.