tamilnadu

img

வேடந்தாங்கல் விவகாரம்: மத்திய அரசையும் சேர்க்க நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக் கைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசை  எதிர்மனுதாரராக சேர்க்க அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை ஜூலை 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள் ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப் பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.வேடந்தாங்கலின் பரப்பை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு  தடை விதிக்க கோரி சென்னை  சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஸ்டாலின் ராஜா என்பவர்  வழக்கு தொடர்ந்திருந்தார்.அவர் தனது மனுவில், ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்த சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக  குறைத்து அறிவிப்பதற்கான கருத்துருவை தமிழ்நாடு சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லொலிகர் தேசிய விலங்குகள் நல வாரியத்துக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி அனுப்பியுள்ளார்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்து மாற்றி அறிவிப்பதற்கும், தொழிற் சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளுக்கு முரணாக சரணாலயப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் .இந்த மனு  நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ் ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் புதனன்று (ஜூன் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.  இதை கேட்ட நீதிபதிகள், விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடர்ந்திருந்தால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்வோம் என தெரிவித்தனர்.மேலும், இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச் சகத்தையும், தனியார் மருந்து நிறுவனத்தையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

;