tamilnadu

img

திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ சுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிக
மானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.தமிழ்நாடு, ஆந்திரா, தில்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கொரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், சைதை சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவருமான மா.சுப்பிரமணியனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.