“அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே இதுவரையிலான நடைமுறை. அவ்வாறிருக்க, 8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல், வருமானத்திற்கு வரி, வட்டி, அபராதமாக ரூ. 1,800 கோடி செலுத்த வேண்டும் என்று தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்?. இதன்மூலம் 139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை அழிக்க சதி நடக்கிறது” என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.