tamilnadu

img

சிஐடியு கண்டெடுத்த புதையல் தோழர் ராஜப்பா

சென்னை, நவ. 12 - நேர்மையை மிக நேர்மை யாகப் பின்பற்றிய தோழர் எஸ்.ராஜப்பா என்றும் சிஐ டியு கண்டெடுத்த புதையல் தோழர் ராஜப்பா என்றும் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவராகவும், பணி ஓய்வுக்குப் பிறகு கிளப்,  மருத்துவமனை சங்கங்க ளின் தலைவராகவும் பணி யாற்றியவர் தோழர் எஸ். ராஜப்பா. அவரது படத்  திறப்பு கூட்டம் சனிக்கிழமை யன்று (நவ.12) சென்னை யில் நடைபெற்றது. தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்நிகழ்வை நடத்தின. இதில் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:

அ.சவுந்தரராசன்

சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் குறிப்பி டுகையில், “நீக்குப்போக்கு இல்லாமல் கோரிக்கை களுக்காக உறுதியாகப் போராடும் சங்கம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, ஊழியர்களுக்கு கோரிக்கை களைப் புரிய வைத்து அணி திரட்டியவர் ராஜப்பா. 1970 களில் சங்கத்தில் ஏற்பட்ட பிளவிலிருந்து சங்கத்தைக் காத்தவர்களில் ஒருவர்” என்றார். “பணி ஓய்வுக்குப் பிறகு கிளப், மருத்துவமனை, ஓட்  டல் சங்கங்களுக்குத் தலைமை தாங்கினார். நிர்வா கத்திற்கும், தொழிலாளர் களுக்கும் ஏற்புடைய தலை வராகப் பரிணமித்தார். சிஐ டியு கண்டெடுத்த புதைய லாக அவர் இருந்தார். அவ ரைப் போன்றே சில தலை வர்கள் பணியாற்றி வரு கின்றனர்” என்றார். “தமிழக அரசிற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே முரண்பாடு அதிக ரித்து வருகிறது. அரசுப்  பணிகள் அனைத்தையும் அயல்பணி (அவுட்சோர் சிங்) மூலம் செய்ய அர சாணை 115ஐ வெளியிட்டுள் ளனர். இத்தகைய அநியா யங்களை எதிர்த்து அடுத்த  சில மாதங்களில் களப்  போராட்டங்கள் அதிகரிக் கும். தொழிலாளர்களை அணி திரட்ட பல நூறு ராஜப்பாக் கள் தேவை. அதை ஏஐஐ இஏ நிறைவேற்றும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அமானுல்லாகான்

“அகில இந்தியக் காப் பீட்டு ஊழியர் சங்கம் (ஏஐஐ இஏ) உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவர் ராஜப்பா. நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் விவாதிக்கப்பட்ட விஷ யங்களைத் தெளிவாக விளக்கி சுற்றறிக்கை வாயி லாக ஊழியர்களிடம் சேர்க்க உதவியவர். பெங்களூரு கோட்டத்தில் 92 விழுக்காடு ஊழியர்களை உறுப்பினர் களாகக் கொண்டு சங்கம் வலுவாக இருப்பதற்கு ராஜப்பா, க.சுந்தரம் ஆகி யோரது வழிகாட்டுதலே முக்  கியக் காரணம். அரசியல் ஞானம், தத்துவார்த்த விஷ யங்களில் தெளிவு இல்லா மல் தொழிற்சங்கத்தை வெற்றிகரமாக நடத்த முடி யாது. அத்தகைய தெளிவை ஏற்படுத்தியவர் தோழர் ராஜப்பா” என்று ஏஐஐஇஏ முன்னாள் தலைவர் அமா னுல்லாகான் குறிப்பிட்டார்.

கே.வேணுகோபால்

ஏஐஐஇஏ முன்னாள் பொதுச் செயலாளர் கே. வேணுகோபால் தமது புக ழஞ்சலியில், “ஓய்வுபெற்ற பிறகும் தோழர் ராஜப்பா, ஓய்வூதியர் சங்கத்திலும், சிஐடியு-விலும் பணியாற்றி வந்தார். மத்தியத் தர  வர்க்கத்திலிருந்து கடை மட்ட ஊழியர்கள் உள்ள சங்  கங்களின் தலைவராகச் செயல்பட்ட மிக அரிதான  தலைவர்களில் ஒருவர் ராஜப்பா. சங்க கூட்டங்களில் எப்போதும் உழைக்கும் வர்க்க அரசியலைப் பேசு வார். மக்கள் பிரச்சனையிலி ருந்து அரசின் கொள்கைகள் எந்த அளவுக்கு மாறுபட்டு இருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைப்பார். ஏஐஐஇஏ தலைமை ஒப்ப டைத்த பணியை வெற்றிகர மாகச் செய்து முடித்தவர் அவர்” என்றார். “ராஜப்பா - வெள்ளுடை மனிதர் சாமானியர்களின் தலைவர்” எனும் சிறு நூலை மூத்த தலைவர் மாலிக் வெளி யிட, காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்கத் தலைவர்கள் ஜெய ராமன் (சென்னை பகுதி-1), மனோகர் (சென்னை பகுதி- 2) ஆகியோர் பெற்றுக் கொண்  டனர். தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் துணைத்தலைவர் க. சுவாமிநாதன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.  பொருளாதார அறிஞர் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா, கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் கே. நடராஜன், மூத்த தலைவர் மாலிக், ஏஐஐஇஏ துணைத்  தலைவர் எம்.கிரிஜா, கூட்ட மைப்பின் பொதுச் செயலா ளர் டி.செந்தில்குமார், பொது இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க தென்மண்டல பொதுச் செயலாளர் ஜி. ஆனந்த், காப்பீட்டுக் கழக  ஊழியர் சங்க பகுதி பொதுச் செயலாளர்கள் எஸ்.ரமேஷ் குமார் (சென்னை-1), ஆர்.சர்வமங்களா (சென்னை-2), எஸ்.ராமன் (வேலூர்), கிளப் மருத்துவமனை சங்கங்க ளின் தலைவர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, போர்டீஸ் மலர் மருத்  துவமனை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஐ.ஆர். ரவி உள்ளிட்டோர் பேசினர்.