சென்னை, பிப்.20- மயிலாடுதுறை யைச் சேர்ந்த தோழர் ஆர்.ரவீந்திரன் மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற் குழு இரங்கல் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு உறுப்பின ரான தோழர் ஆர். ரவீந்திரன் (66) அவர் கள் உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், எதிர் பாராத விதமாக ஏற்பட்ட மாரடைப்பின் கார ணமாக செவ்வாயன்று (பிப்.20) காலமா னார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அவரது மறைவிற்கு கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறது. கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று நைபர் (NYFIR) என்று அழைக்கப்படும் எம்.சி.ஆர்.எல். கம்பெனியில் ஊழியராக பணியாற்றியவர். வடலூரில் வாலிபர் சங்கத்தின் செயலாளராகவும், கட்சியின் வடலூர் பகுதிக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். வாலிபர் சங்கம் மற்றும் கட்சியின் சார்பாக மக்களுக்கான கோரிக் கைகளை முன்வைத்து நடைபெற்ற பல் வேறு போராட்டங்களுக்கு தலைமை யேற்றவர்.
தற்பொழுது, கட்சியின் மயி லாடுதுறை மாவட்டக்குழு உறுப்பினராக வும், சிஐடியு மாவட்டத் தலைவராகவும் பணியாற்றியவர். மயிலாடுதுறை நக ரத்தில் தீக்கதிர் முகவராக சிறப்பாக செயல் பட்டவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் கட்சி யின் சார்பில் அனுதாபத்தையும், ஆறுதலை யும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.