கிருஷ்ணகிரி, ஜூலை 11- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளத்தின் 14ஆவது மாநில மாநாடு ஜுலை 21இல் திருநெல்வேலியில் நடை பெற உள்ளது. தமிழகத்தில் 1987இல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல உரிமைகளை பெற்றுத்தந்த தலைவர் தோழர் கே.எம்.ஹரி பட். மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட் டங்களில் சிஐடியு ஸ்தாபனம் மூலம் பல போராட்டங்களை நடத்தி தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியவர். தன் வாழ்நாள் முழுவதையும் தொழிலாளர் நலனுக்காக அர்ப்பணித்தவர். தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாட்டிற்கு கே.எம்.அரிபட் நினைவு ஜோதி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும், பிரச்சாரக் கூட்டமும் ஓசூர் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கிளைத் தலைவர் தியாகராஜன் தலை மையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதரன் தோழர் ஹரிபட் நினைவு ஜோதியை எடுத்துக் கொடுக்க பொருளாளர் சண்முகம் பெற்றுக் கொண்டார். இதில் செயலாளர் பிரபாகரன், நிர்வாகிகள் தனசேகரன், கோவிந்தன், அருண், சுபாஷ் ,போக்குவரத்து பணிஓய்வு பெற்ற தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ராஜா, சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.