தரங்கம்பாடி, செப்.15- நாகை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான ஆடவர் கோ கோ போட்டி புதனன்று துவங்கியது. கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் போட்டியை துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் திருச்சி, தஞ்சாவூர்,புதுக்கோட்டை உள்பட 6 மாவட்டங்களிலிருந்து 13 கல்லூரிகள் பங்கேற்று விளையாடின. வியாழனன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பொறையார் த.பே.மா.லு கல்லூரி முதல் பரிசையும், பூண்டி ஏ.வி.வி.எம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரி இரண்டாம் பரிசை வென்றது. மூன்றாம் பரிசை திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரியும்,நான்காம் பரிசை முசிறி அறிஞர் அண்ணா அரசு கல்லூரியும் வென்றன. பரிசளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறை தலைவர் முனைவர் பழனிச்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை, சான்றிதழ்களை வழங்கி உரையாற்றினார். துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ்,உடற்கல்வி இயக்குநர்கள் உடனிருந்தனர். நிறைவாக உடற்கல்வி இயக்குநரும், ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஸ்ரீதர் தங்கத்துரை நன்றி கூறினார்.