tamilnadu

img

கூட்டுறவு விற்பனை சங்கங்களின் சங்கங்கள் கோரிக்கை மனு...

தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் ஊழியர் ஊதிய கோரிக்கை தொடர்பாக ஊதிய சீரமைப்புக் குழு தலைவரும் கூடுதல் பதிவாளருமான முருகனை சந்தித்து  கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது. அதேபோல் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முனைவர். இல. சுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து நியாய விலை கடை ஊழியர்களின் ஊதிய உயர்வு போனஸ் சட்டவிதி திருத்தம், அனைவருக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் மாநிலத் தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் ஆர்.ஜீவானந்தம் மாநில துணைத்தலைவர் இ.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.