tamilnadu

img

ஒமிக்ரான் பரவல்: 1-8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள்  

ஒமிக்ரான் பரவலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடைபெற வேண்டும். பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்தலாம். பள்ளிக்குள் நுழையும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக்கூடாது. கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறை வணக்கம், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.பள்ளிகளில் நீச்சல் குளம் இருப்பின் அதனை மூட வேண்டும். நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக்கூடாது என இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

மேலும் அரசின் வழிகாட்டுதல்களை அனைத்து வகையான பள்ளிகளிலும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். ஒமிக்ரான் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

;