சென்னை, ஜூன் 24- சென்னை ஐசிஎப் கேன்டீன் நிர்வாகக்குழு தேர்தலில் சிஐடியு சார்பில் போட்டியிட்ட ஜி.நடராஜன் வெற்றி பெற்றார். ஐசிஎப் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில், கேன்டீன் நிர்வாகக் குழுவுக்கான தேர்தலில் ஐசிஎப் யூனைட்டெட் ஒர்க்கர்ஸ்யூனியன் (சிஐடியு) தேர்தலில் போட்டி யிட்டு ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. எல்.எச்.பி தொகுதியில் ஜி.நடராஜன் 334 வாக்குகள் பெற்று 168வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மற்ற 3 தொகுதிகளில் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். பி ஷாப் தொகுதியில் ஆறுமுனை போட்டியில் 17 வாக்குகள் வித்தியாசத்தில் சிஐடியு தோல்வியடைந்தது. வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொழிலாளர்களுக்கு நன்றியும், தொழிலாளர் நலனுக்காக போராட்டத்தில் சிஐடியு முன்னணியில் எப்போதும் இருக்கும் என சங்கத்தின் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொதுச் செயலாளர் பா.ராஜாரா மன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.