tamilnadu

img

சிஐடியு 56-ஆவது அமைப்பு தின கொண்டாட்டம்

சிஐடியு 56-ஆவது அமைப்பு தின கொண்டாட்டம்

புதுச்சேரி, மே 30-  இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு துவங்கி 55 வது ஆண்டையொட்டி புதுச்சேரி முதலியார் பேட்டையில் உள்ள சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் கொடி யேற்றி இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு மாநில செய லாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தலைவர் பிரபுராஜ், முன்னாள் தலைவர் ராமசாமி நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், ராஜ்குமார், மணிபாலன், தினேஷ்குமார் உள்ளிட்ட திரளானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை தமிழ் மின் நகரில் உள்ள சிஐடியு அலுவலகத்தில், இந்திய தொழிற்சங்க மையம் அமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.சிஐடியு மாவட்டத் தலை வர் கே. காங்கேயன் தலைமையில், நடை பெற்ற 56 ஆம் ஆண்டு அமைப்பு தினத்தில், பொதுக்குழுக்கூட்ட முடிவுகளை விளக்கி, மாநில செயலாளர் டி.குமார், உலக தொழிற்சங்க இயக்க வரலாறு என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் இரா.பாரி ஆகியோர் பேசினர்.