tamilnadu

img

முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைக்க முயற்சிக்கும் முதல்வர்

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதியுதவிதிட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேட்டை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக வும், அரசுதானாகவே முன்வந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடத்தில் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முறைகேட்டுக்குகாரணமே, கடந்த ஆண்டு இறுதியில் விவசாயிகள் தானாக பதிவு செய்யும் முறையை மத்திய அரசு அறிவித்ததுதான் என்றும் ஆதார் மற்றும்குடும்ப அட்டையை  அடிப்படையாகக் கொண்டு பதிவுசெய்யலாம் என அறிவிப்பு கொடுத்ததால் பிரச்சனை ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். 

மோசடி அம்பலமாகி ஏறத்தாழஒரு மாதம் கழித்து இப்படியொருகாரணத்தை முதலமைச்சர் தெரிவித்திருப்ப தன்நோக்கம் என்ன என்ற கேள்விஎழாமல் இல்லை.அதிகாரிகள் கண்டுபிடித்து அரசு தானாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது என்று முதலமைச்சர் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைக்க முயற்சிக்கும் செயலாகும்.  முதலமைச்சரே இப்படி உண்மைகளை மறைத்துப் பேசுவது அழகல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இந்த முறைகேடு தொடர்பாக, அதிகாரிகள் மட்டத்திலான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தமிழக வேளாண்துறை அமைச்சர் தெரிவித்தது ஆகஸ்ட்-13ஆம் தேதி. சிபிசிஐடி இது குறித்து வழக்கு பதிவு செய்தது செப்டம்பர் 2ஆம் தேதிதான்.
இந்த திட்டம், ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலமுள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும். வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்பது தான். 1.12.2018 அன்று பிரதமரால் துவக்கப்பட்டாலும் 2019ம் ஆண்டு தான் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.தமிழ்நாட்டில் தமிழக வேளாண்மை துறை முதன்மை செயலாளர்ககன்சிங்பேடி பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளதைப் போல 2020 மார்ச் 31ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் 39 லட்சம் பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இத்திட்டத்தில் சேர, ஒருவர் சிறு- குறுவிவசாயி என்பதற்கான சான்றிதழ் அவசியம். அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்று மத்திய அரசு இன்றைய தேதி வரை மாற்றவில்லை. 

முதலமைச்சர் குறிப்பிட்டுள்ள தைப் போல, ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண் மட்டும் இருந்தால் போதும் என்று மத்திய அரசு எந்த அறிவிப்பையும் பகிரங்கமாக வெளியிடவில்லை. ஒருவேளை மாநில அரசுகளுக்கு அவ்வாறு உத்தரவுவந்திருந்தால், “சிறு-குறு விவசாயிகளுக்கு மட்டும்” என்ற வரையறை எங்கே வருகிறது. விவசாயிஎன்பதற்கான சான்றிதழே  தேவை யில்லை. ஆதார், வங்கிக்கணக்கு எண் இருந்தால் போதும் என்று மத்திய அரசே  அறிவித்திருக்கிறது என்றால்  இப்போது முறைகேடு என்ற  பேச்சுக்கே வழியில்லையே. விசாரணை,வழக்கு எதுவுமே அவசியமில்லையே. இப்போது, வழக்கே  விவசாயிகள்அல்லாதவர்கள்  இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு   பலனடைந்திருக் கிறார்கள் என்பது தானே?“டிஜிட்டல் இந்தியா” என்ற கனவுலகத்தில் பிரதமரும் பிஜேபியும் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்அல்லவா? அதனால், விவசாயிகள் தங்களாகவே, இத்திட்டத்தில்தங்கள் பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம், ஆனால் அந்த நபர் தகுதியானவர்தானா, கொடுத்துள்ள விபரங்கள் சரியானதா என்பதைஇறுதிப்படுத்தும் பொறுப்பு வேளாண்இணை இயக்குனருடையது. ஒவ்வொரு இணை  இயக்குநருக்கும்இதற்கென்று தனித்தனியாக பாஸ்வேர்டு (கடவுச்சொல்) கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டு தனியார் இணைய மையங்களுக்கு எப்படி கிடைத்தது? வேளாண்துறை மூலம் தான் சென்றிருக்க வேண்டும். இந்த திட்டத்தில் நடைபெற்று ள்ள மோசடி குறித்து முதன்முதலாக14.5.2020 அன்று 

===தொடர்ச்சி 4ம் பக்கம்====

;