tamilnadu

img

தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் இயக்குநருக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு பாராட்டு சான்றிதழுடன் ரூ.1 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படும் “அகாடமி விருது” எனும் ஆஸ்கர் விருது. யானைகளை பராமரிக்கும் தமிழ் ஆவண குறும்படமான “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. தாயைப் பிரிந்து தவித்த 2 குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரியின் முதுமலையை சேர்ந்த பொம்மன், பொம்மி தம்பதி குறித்த கதைக்கருவான “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவண குறும்படத்தை இயக்கிய கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு, தயாரிப்பாளர் குனெட் (இருவரும் பெண்கள்) மொன்கோ ஆகியோர் ஆஸ்கர் மேடையில் விருதினை பெற்றனர். 
இந்த நிலையில், ஆஸ்கர் விருது வென்று இந்தியா வந்தடைந்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அவருக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூ.1 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் வழங்கினார்.
 

;