tamilnadu

‘சாதி, மதங்களை கடந்து பணியாற்றுங்கள்’

சென்னை,பிப்.28- சென்னை வண்டலூர் அருகே  ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது, “இந்த பயிற்சியின் மூலம், சமுதாயத்தில் எழும் புதுப்புது சவால்களை எதிர்கொள்வ தற்கும், அனைத்துத் தரப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனை களை புரிந்துகொள்வதற்கும் வழிவகை ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

காவல்பணி என்பது ஒரு வேலை இல்லை, அது சேவை. அதை  நீங்கள் முழுவதும் உணர்ந்து பணி யாற்ற வேண்டும். நேர்மையாக கட மையை செய்வது மூலம், மக்களு டைய நன்மதிப்பை பெற முடியும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எந்த எதிர்பார்ப்புகளும் இல்லா மல் பொது மக்களை நேசிப்பது, சாதி மத வேறுபாடுகளைக் கடந்து எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் சட்டத்தின் முன் எல்லோரையும் சம மாக நடத்துவது, சட்டத்தை மீறு பவர்களுக்கு சிம்ம சொப்பன மாக விளங்குவது போன்ற கார ணங்களால் தான், காவல்துறையை ‘பொதுமக்களின் நண்பன்’ என்று குறிப்பிடுகிறோம்.

அதற்கு ஏற்றாற் போல் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார். தொழில்நுட்பத்தை ஒரு ஆயுத மாக பயன்படுத்திகுற்றங்கள் நடப்பதற்கு எந்த விதத்திலும் அனு மதிக்காமல், முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நல்லாட்சியின் இலக்க ணம் என்பது மக்களுக்கு அமைதி யான வாழ்க்கையை அமைத்து தருவதுதான் என்றும் முதல்வர் தெரிவித்தார். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி யகத்தில் தற்போது 19 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 429 காவல் உதவி ஆய்வா ளர்கள் பயிற்சி முடித்தனர். இவர்களில் துணைக் கண்காணிப்பாளர்கள் 13 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.