tamilnadu

img

இன்று முதல் 17-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி இன்று முதல் வரும் 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

;