tamilnadu

img

சென்னை அரசு மருத்துவமனை முதல்வர் விடுப்பில் சந்தேகம்: கனிமொழி எம்பி

சென்னை:
கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தியின் விடுமுறை சந்தேகத்தை எழுப்புகிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் ஆர். ஜெயந்தி திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார்.

அதற்கான காரணம் என்னவென்று தெளிவாகக் கூறப்படவில்லை. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் குழப்பம் நிலவிவரும் சூழலில், இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது’’ என பதிவிட்டுள்ளார்.இதற்கிடையே, சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதல்வர் ஜெயந்திக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், அவருக்கு மாற்றாக மருத்துவர் நாராயணசாமி புதியதாக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் சுகாதாரத் துறையும் அரசும் இந்த தகவலை உறுதி படுத்தவில்லை.

;