சென்னையில் உள்ள ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,562 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. 17,527 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் மொத்தமாக 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 223 பேர் உயிரிழந்துள்ளனர்; 11,265 பேர் குணமடைந்துள்ளனர். 11,437 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 4,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 46 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 3,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 26 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 2,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 16 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 2,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 34 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 2,273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 39 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 2,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 23 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாரில் 1,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 11 பேர் உயிரிழந்துள்ளனர். வளசரவாக்கத்தில் 1,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6 பேர் உயிரிழந்துள்ளனர்.