tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

நியமனம்

சென்னை, மார்ச். 1 எல் அண்ட் டி பைனான்ஸ் இயக்குநர் மற்றும் குழுத் தலைவராக சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு நிர்வாககுழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது தலைவராகப் பணியாற்றிய  ஷைலேஷ் ஹரிபக்தியிடம் இருந்து இந்த பொறுப்பை அவர் பெற்றுக்கொண்டார்.   எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனம் வேளாண் உற்பத்தி சாதனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கான நிதியுதவி மற்றும்  நுண் கடன்கள் ஆகியவற்றின் சந்தையில் முன்னணியில் உள்ளது மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சாலைகள் போன்ற உள்கட்டமைப்புத் துறைகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

500 எஸ்,.டி ரேஞ்ச் டிஎம்டி பார்கள் அறிமுகம்

சென்னை, மார்ச் 1 அதிகமாக நீர்த்துப்போகும் தன்மையுடைய கட்டிடங்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய 500 எஸ்டி ரேஞ்ச் டிஎம்டி பார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதனை நடிகர் ஆர்யா அறிமுகப்படுத்தினார். இந்த கம்பிகள் கட்டிடத்திற்கு உறுதியும்  வலிமையையும் தரும் என்ற இதனை அறிமுகம் செய்துள்ள திரிசூல் ஸ்டீல்ஸ் மற்றும் டிஎம்டி பார்ஸ்  நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஎம்டி துறையில் பெரும்பாலானவை 500 அல்லது 500 டி பார்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் திரிசூல் 550 எஸ்டி பார்கள் மிக உயர்ந்த தயாரிப்பை கொண்டுள்ளதாக அந்நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இயற்கை பேரழிவுகளில் இருந்து கட்டிடத்தை இந்த கம்பிகள் பாதுகாக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டரில் தீ

சிதம்பரம், மார்ச் 1- புவனகிரி அருகே மிராலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந் திரன்(வயது 50). இவருக்கு சொந்தமான விளை நிலத்தில் நெல் அறுவடை செய்யப்பட்டது. பின்னர் வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு அவர், வீட்டிற்கு புறப்பட் டார். அப்போது மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பி டித்து எரிந்தது. உடனே ஓட்டு நர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது பற்றி  தகவல் அறிந்ததும் சேத்தி யாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழ கன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது.

 

உள்ளாட்சி அமைப்பு களுக்கு மறைமுகத் தேர்தலை அமைதியாக நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில தேர் தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள் ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்ப தாக ஒன்றிய நிதி யமைச்சகம் தெரிவித்துள் ளது. இது கடந்த ஜன வரி மாதத்தைவிட 18 சத வீதம் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வலியுறுத்தி, தில்லியில் உள்ள உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டு தூதர்களுக்கு இந்திய  அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 5.4 சத வீதம் வளர்ச்சி கண்டுள்ள தாக தேசிய புள்ளி யியல் அலுவலகம் தெரி வித்துள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

வர்த்தக உபயோகத் திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50 ஆக விற்கப்பட உள்ளது.

உலகில் பருவ நிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து வருவதால் அடுத்த, 18 ஆண்டுகளில் மக்கள் நோய், பசி, பட்டினி, வறு மையால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று ஐக்கிய  நாடுகள் சபை எச்சரித்துள் ளது.