வாலிபர் வெட்டிக் கொலை
அம்பத்தூர், அக். 30- திருமுல்லைவாயல் பெரியார் நகர் நேதாஜி குறுக்குத் தெருவில் வசித்த வர் சந்தோஷ்குமார் (32). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் மீது திருமுல்லைவாயல், ஆவடி உள்ளிட்ட காவல் நிலையங்க ளில் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் புதன்கிழமையன்று சந்தோஷ்குமார் வீட்டில் இருந்து கிளம்பி ரயில் நிலை யம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் திடீரென சந்தோஷ்குமாரை சரமாரி யாக வெட்டியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சந்தோஷ்குமாரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்துள்ளனர். இது குறித்து திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
போராடும் மருத்துவர்களை அரசு அழைத்துப் பேச வேண்டும் மூத்த மருத்துவர்கள் கோரிக்கை
செங்கல்பட்டு, அக்.30- போராடி வரும் மருத்துவர்களை அரசு அழைத்துப்பேச வேண்டும் என செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூத்த மருத்துவர்கள் புதனன்று (அக். 30) செய்தி யாளர்களிடம்பேசுகையில், ‘கடந்த 60 மணி நேரமாகச் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூத்த மருத்துவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக அறுவைச் சிகிச்சை, காய்ச்சல் பிரிவு, வெளிநோயாளிகள் பகுதி என அனைத்து பிரிவுகளி லும் மூத்த மருத்துவர்கள் பொதுமக்களின் நலன் கருதி பணி செய்து வருகின்றோம். 500 மருத்துவர்கள் பணி செய்திடும் இடத்தில் 60 பேர் பணி செய்கிறோம். எனவே உடனடியாக அரசு மருத்துவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மேலும் இவர்களுக்கு ஆதரவாக கருப்பு பேட்ஜ் அணிந்து நாங்கள் பணி செய்து வருகின்றோம்’எனக் கூறினர்.