tamilnadu

சென்னை ,செங்கல்பட்டு முக்கிய செய்திகள்

ஐசிஎப் தனியார்மயம் வாபஸ்: தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி

சென்னை, ஜூலை.12 சென்னை அயன்புரத்தில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி பிரிவை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. சென்னை பெரம்பூர் ஐசிஎப் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டி தயாரிப்பு பிரிவில் தனியாரை புகுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதை எதிர்த்து அனைத்து சங்கத்தை சேர்ந்த  தொழிலாளர்கள் ஒன்றுபட்ட உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து நிர்வாகம் தனியார் மய முடிவை கைவிடுவதாக உறுதி அளித்தது.  ஐசிஎப் நிர்வாகம், போராடிய தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசியது. அனைத்து சங்க போராட்டக்குழுவினரின் கோரிக்கையை ஏற்று ரயில்பெட்டி தயாரிப்பு பிரி வில் தனியார் மயத்தை புகுத்துவதை திரும்ப ப்பெற்றது. ஐசிஎப்-ன் உற்பத்தி உயர்வுக்கு ஏற்ப பி கூடத்தில் ஸ்கில்டு காலிப்பணி யிடங்களை நிரப்பவும் குரூப் டி தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் தேவைக்கு ஏற்ப புதிய வெல்டிங் மோட்டார்களை வழங்கவும் உடனே நடவடிக்கை எடுப்பதாகவும் நிர்வாகம் உறுதியளித்தது. இது  தனியார் மயத்திற்கு எதிராக தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தொழிலாளர்கள் பாராட்டி னர்.

தனியார் லாரி தண்ணீர் விலை ரூ.4500 ஆக உயர்வு

சென்னை, ஜூலை 12-  சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் அத்தியா வசிய தேவைக்கு கூட லாரி தண்ணீரை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 900 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் நடை பெற்றாலும் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையாகவே உள்ளது. லாரி தண்ணீருக்கு முன்பதிவு மூலம் பணம் செலுத்தி 13 ஆயிரத்து 500 பேர் காத்திருக்கிறார்கள். இதில் 7 ஆயிரம் பேர்களுக்குத் தான் லாரி தண்ணீர் அனுப்பப்படுகிறது. மற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படு கின்றனர். ஒருமுறை லாரி தண்ணீர் வந்தால் 30 நாட்களுக்கு பிறகுதான் 2-வது முறை லாரி தண்ணீர் கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் தனியார் லாரியை தொடர்பு கொண்டு அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக ரூ.2,500க்கு கிடைத்த 1 லாரி தண்ணீர் இப்போது ரூ.4,500க்கு விலையை உயர்த்திவிட்டனர். தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர். இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ஏழை நடுத்தர மக்களுக்காக சென்னை குடிநீர் வாரியம் இலவசமாக தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. வசதி படைத்தவர்கள் பணம் கட்டி தண்ணீர் பெற்று வருகிறார்கள். இதை நாங்கள் முறைப்படுத்தி தண்ணீர் வழங்கி வருகிறோம் என்றார்.