மடுகரையில் கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை
சேதராப்பட்டு, ஜன.7- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அக்ரா மங்கலம் கிராமத்தை சேர்ந்த வர் பாலகிருஷ்ணன், இவரது மகள் ஜெயஸ்ரீ (23). என்ஜி னீயரான இவர் புதுவை மடுகரை ராம்கி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அருண்ராஜியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வடபழனியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெற்றோர்கள் சமாதானம் அடைந்து கடந்த செப்டம்பர் மாதம் இருவருக் கும் முறைப்படி திருவந்தி புரம் தேவநாதசாமி கோவி லில் திருமணம் செய்து வைத்தனர். இதற்கிடையே ஜெயஸ்ரீ கர்பமாகி 5 மாதங்களா கியது. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ஜெயஸ்ரீக்கு அவரது பெற்றோர் சடங்கு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது அருண்ராஜ் மற்றும் அவரது தாயார் செல்வி ஆகியோர் தங்க வளையல் கேட்டு ஜெயஸ்ரீ யின் பெற்றோரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகராறின் போது அருண்ராஜை ஜெயஸ்ரீயின் சகோதரர் ஜெயபிரகாஷ் தாக்கியதாகக் கூறப்படு கிறது. பின்னர் உறவினர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்த நிலையில் மகளை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வ தாக அவரது பெற்றோர் அருண்ராஜ் குடும்பத்தினரி டம் தெரிவித்தனர். அதற்கு நாள் சரி இல்லாததால் நல்ல நாள் பார்த்து (புதன்கிழமை) அனுப்பி வைப்பதாக அருண்ராஜ் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் திங்க ளன்று ஜெயஸ்ரீ கணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக அவரது சகோதரிக்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெய ஸ்ரீயின் பெற்றோர் மகள் இறப்பில் சந்தேகம் உள்ள தாக கூறி நெட்டப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதனடிப்படை யில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். ஜெயஸ்ரீக்கு திருமண மாகி சில மாதங்களே ஆவதால் தாசில்தார் விசார ணையும் நடைபெற்று வருகிறது.
பெண் குழந்தையுடன் தாய், பாட்டி சேர்ந்து செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு
மாட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, ஜன.7- பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்த தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கான கல்வி இந்தியாவில் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஆண்களைவிட 20 சதவீதம் பெண்கள் கல்வியறிவில் குறைவாக உள்ளனர். பெண் குழந்தைகள் பாதுகாப்பு கல்வி மேம்பாடு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் சிறுவயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்துதல், பெண் சிசு கொலை ஆகியவை அதிகம் நடக்கிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் சமூக நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுடன் செல்பி எடுத்து அனுப்பும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுடன் உற்சாகமாக செல்பி எடுத்து அனுப்பினர். இதில் 15 சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இதேபோல் ஒரு திட்டத்தை ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். இதில் 3 தலைமுறை பெண்களை கவுரவிக்கும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி பெண் குழந்தை அவரது தாய், பாட்டி ஆகிய 3 தலைமுறைகளுடன் செல்பி எடுத்து போட்டோ அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வருகிற 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தை உள்ளவர்கள், பாட்டி, அம்மா, குழந்தை ஆகியோர் செல்பி எடுத்து 7397285643 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகைப்படத்தை அனுப்ப வேண்டும். மேலும் அதில் பெண் குழந்தையின் முழு பெயர், பெற்றோர் பெயர், முகவரி பதிவு செய்ய வேண்டும் இதனை வருகிற 13 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இதில் சிறந்த செல்பி படம் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்
இயற்கை மரணமடைந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிதி உதவி
விழுப்புரம், ஜன. 7- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமணஉதவித் தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 348 மனுக்கள் வரப்பெற்றன. அந்த மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பரிந்துரைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் இயற்கை மரணமடைந்த 20 மாற்றுத்திற னாளிகளின் குடும்பத்திற்கு ரூ.17 ஆயிரம் வீதம், ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
எலக்ட்ரானிக்ஸ் கடையில் தீவிபத்து
திருவண்ணாமலை, ஜன. 7- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கடைவீதியில் டி.வி.எஸ் ஷோரூம் அருகில் சீனு எலக்ட்ரானிக்ஸ் என்ற கடை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், செவ்வாயன்று (ஜன.7) காலை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் முழுமை யாக கருகியது. இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை தாக்கிய கணவருக்கு 7 ஆண்டு சிறை
விழுப்புரம், ஜன. 7- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காட்டு செவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(38). இவர் நகை அடகு கடை வைத்திருந்தார். இவரது கடையில் கொள்ளர் கிராமத்தைச் சேர்ந்த தர்மன் மகள் ஜெயந்தி (33) என்பவர் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தையும் உண்டு. இந்நிலையில், ஜெயந்தியுடன், தமிழ்ச்செல்வன் சேர்ந்து வாழ மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டபோது, ஜெயந்தியை தமிழ்ச்செல்வன் தாக்கினார். இது குறித்து, ஜெயந்தி திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி, தமிழ்ச்செல்வனை கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திங்களன்று வழக்கை விசாரித்த நீதிபதி எழில் வழக்கில், தமிழ்ச்செல்வனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட ஜெயந்திக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல்துறை ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்
கள்ளக்குறிச்சி, ஜன.7- கச்சிராயப்பாளையம் அருகே பால்ராம்பட்டு கிரா மத்தை சேர்ந்தவர் கங்காதரன் (54). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த அய்யாக்கண்ணு (67) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக கங்காதரன் கள்ளக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் பிரச்ச னைக்குரிய இடத்தில் கச்சிராயப்பாளையம் காவல்துறை பாதுகாப்புடன் அய்யாக்கண்ணு வீடு கட்டும் பணியை தொடங்கினார். இதையடுத்து பிரச்சனைக் குரிய இடத்தில் வீடு கட்டுவ தற்கு தடை ஆணை வழங்கக் கோரியும், அய்யாக்கண்ணு உள்பட 12 பேர் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரியும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது கள்ளக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைக் காக ஆஜராகுமாறு கச்சி ராயப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் வள்ளிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இருப்பி னும் ஆய்வாளர் வள்ளி நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. இதையடுத்து வழக்கில் ஆஜராகாத ஆய்வாளர் வள்ளிக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிபதி ரெஹானாபேகம் பிடி வாரண்டு பிறப்பித்து உத்தர விட்டுள்ளார்.