tamilnadu

img

திருப்பதி செல்லும் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்

சென்னை, ஜூலை 23- பராமரிப்பு பணி காரணமாக காட்பாடியை விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை ஜூலை 24 முதல் 30ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: திருப்பதியிலிருந்து காட்பாடிக்கு தினமும் காலை 10.55 மணிக்கு வண்டி  எண் 07581 கொண்ட பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்க மாக காட்பாடியிலிருந்து திருப்ப திக்கு தினமும் பிற்பகல் 3 மணிக்கு வண்டி எண் 07660 கொண்ட பயணி கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் ஜூலை 24 முதல் 30ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படு கிறது. விழுப்புரத்திலிருந்து திருப்ப திக்கு தினமும் காலை 5.30 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06584 கொண்ட  இன்டா்சிட்டி விரைவு ரயில் ஜூலை 24 முதல் 30ஆம் தேதி வரை காட்பாடி யுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக வண்டி எண் 06853 கொண்ட ரயில் திருப்பதியிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியிலிருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல் விழுப்புரம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.