தமிழகத்தில் நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் மாற்றப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில் நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணிமுதல் 12.30 மணிவரையும், பிற்பகல் 3 மணிமுதல் 7 மணிவரையும் இயங்கும். சென்னை தவிர இதர பகுதிகளில் காலை 9 மணிமுதல் 1 மணிவரையும், பிற்பகல் 2 மணிமுதல் 6 மணிவரையும் ரேஷன் இயங்கும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.