சென்னை,அக்.4- வெப்பச் சலனம் காரண மாக வட மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்து டன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச மாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஆயக்குடியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.