tamilnadu

img

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு அருகே ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி  தமிழகத்தின் தென்மாவட்டங்கள் வரை பரவியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது.