சென்னை:
வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில், தென்மேற்கு பருவமழை காரணமாக மழைபெய்யக்கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2 அன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதால், தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் மத்திய வங்கக் கடல், அதைஒட்டியுள்ள மேற்கு வங்க கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.