‘இந்தியா’ கூட்டணி சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதி மாறன் புதனன்று (மார்ச் 27) தேர்தல் அலுவலர் கே.ஜே.பிரவீன் குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், அ.வெற்றியழகன், மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ஆகியோர் உடன் இருந்தனர்.