tamilnadu

கிராமங்களுக்கு சாதிய பெயர் அடையாளத்தை நீக்குக... பேரவையில் விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்.....

சென்னை:
நவீன தீண்டாமை, ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க திமுக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் தோள் கொடுக்கும் என்று சிந்தனைச்செல்வன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனைச் செல்வன், “தமிழ்நாட்டில் விகிதாச்சார தேர்தல் முறையை கொண்டு வருவதற்கும்தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றார்.சமூகநீதியை அனைத்து தளங்களிலும் நிறைவேற்ற அரசு பணியில் பதவி உயர்வுகளும் இனசுழற்சி அடிப்படையில் வழங்க வேண்டும். வேளாண் நிதிநிலை அறிக்கையில் எருமை, பன்றி வளர்ப்பு குறித்த திட்டங்கள் இடம்பெற வேண்டும். நிலமற்ற கூலி விவசாயிகளுக்கான திட்டங்கள் வேண்டும். முதியோர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளுக்கு ‘உடன்பிறப்பு’ என்கிற பெயரில் உணவகம் திறக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.ஒன்றிய அரசாங்கம் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கிருத்துவ ஆதிதிராவிடர்கள் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். இதற்கு காரணம், அவர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கி இருந்தாலும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இடைக்கால ஏற்பாடாக கிருத்துவத்தை தழுவும் ஆதிதிராவிடர்களுக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.தமிழ்நாட்டின் அரசாணைகளில் இன்னமும்தொடர்ந்து கொண்டிருக்கும் ‘காலனி’ என்றவார்த்தையை அறவே நீக்கி மாற்றுச்சொல் கொண்டுவர வேண்டும். பல்வேறு கிராமங்களில் இன்னமும் சாதியின் பெயர் உள்ளது. குறிப்பாக தர்மபுரிமாவட்டத்தில் சக்கரப்பட்டி என்று உள்ளது. இந்த அடையாளத்தை நீக்க வேண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக நடத்த வேண்டும். இரும்பு கூண்டுக்குள் அம்பேத்கர், பெரியார் சிலைகள்அடைபட்டு கிடப்பதை அறவே நீக்க வேண்டும்.ஏற்றத் தாழ்வுகள், நவீன தீண்டாமையைஒழிக்க திமுக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் என்றென்றும் தோள் கொடுக்கும்என்றும் சிந்தனைச் செல்வன் பேசினார்.

காட்டுமன்னார் கோயில் தொகுதியில் உள்ள வீராணம் ஏரி பல ஆண்டுகளக தூர்வாரப்படாமல் உள்ளது. அதை தூர்வார வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘வீராணம் ஏரி கடந்த திமுக ஆட்சியில் தூர்வாரப்பட்டு, அந்த மண்ணைக் கொண்டு கரை உயர்த்தப்பட்டது. அதன்பின் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஏரியும் தூர்வாரப்படவில்லை. விரைவில் வீராணம் ஏரி தூர்வாரப்படும்’’ என்றார்.

;