தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் 2012-2016 காலகட்டத்தில் கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளிலிருந்த போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் புகார் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராமேஸ்வர முருகனின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு எனப் பல இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், வருமானத்திற்கு அதிகமாக 354.66% சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.