tamilnadu

img

தேனி மக்களவைத் தொகுதி வெற்றியை எதிர்த்து வழக்கு

சென்னை:
தேனி மக்களவைத் தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிக்கக் கோரிய வழக்கில், தலைமைத் தேர்தல் ஆணையம், எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று பணப் பட்டுவாடா புகாரால் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை சுட்டிக் காட்டிய மனுதாரர், தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் ஏன் ரத்து செய்யவில்லை என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.எனவே ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், ஓ.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

;