tamilnadu

img

மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வெட்பாளார்கள் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

வடசென்னை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேலு, நூர்முகமது, வட சென்னை சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

********************

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்  திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சார்ந்த கே.ஜெயக்குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சென்னை மாநிலக் குழு அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., அ.சவுந்தரராசன், காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.கணபதி, டி.குணபதி,  சுப்பிரமணி ஆகியோர்  உள்ளனர்.

********************

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் க. பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.