tamilnadu

img

பானை சின்னத்திற்கு வாக்குகள் கோரி பிரச்சாரம்

சிதம்பரம், ஏப். 14-சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் நகரத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டச்செயற்குழு ராமச்சந்திரன், எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் தொகுதி பொறுப்பாளர் வன்னியரசு, பாலாஜி உள்ளிட்டவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

;