சென்னை, மார்ச் 24- தேர்தல் பத்திரம் மூலம் பல கோடி மோசடி செய்த பாஜகவை மக்களவைத் தேர்தலில் வீழ்த்து வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
வட சென்னை மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் பெரியார் நகரில் 9ஆவது வட்டச் செயலாளர் டி.ஆண்ட்ரூஸ் தலை மையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி அறிவிக்கப்படாத அவசரகால நிலை போல் (எமர்ஜன்சி) உள்ளது. தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுகிறது. தொழிற்சங்கத்தை படிப்படியாக சிதைத்து விட வேண்டும் என்ற அடிப்படையில் சட்டங்களை மாற் றிக் கொண்டிருக்கிறார்கள்.
தொழி லாளர்களை மதத்தின், சாதியின் அடிப்படையில் பிளவுபடுத்தும் பணிகளை திட்டமிட்டு பாஜக மேற்கொள்கிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராக செயல் படும் பாஜகவை வீழ்த்த வேண்டிய கடமை நம்முன் உள்ளது என்றார்.
அரசுக்கு எதிராக யாராவது மாற்றுக் கருத்து கூறினால் பிணையில் வெளியே வரமுடி யாத வழக்குகளில் கைது செய்யப் படுகிறார்கள் அல்லது கொல்லப் படுகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் தொல்லை கொடுக்கிறார்கள். ஆளுநர்கள் அவர்களுக்குரிய பணிகளை மேற்கொள்வதை விட ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் அண்மையில் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டு ஆளு நர் தலையில் ஓங்கிக் கொட்டியது என்றும் அவர் கூறினார்.
தேர்தல் பத்திரத்தை அறிமுகப் படுத்தி பாஜக மிகப் பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை தவறாக பயன்படுத்தி பெரிய நிறுவனங் களை மிரட்டி பல கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளனர். இப்படி நாட்டையே ஊழல் களமாக மாற்றிய பாஜக வுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்றார்.
சமூக நீதி, மாநில உரிமை, கூட்டாட்சி தத்துவம், அரசியல் அமைப்பு சாசனம், ஜனநாயகம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாக்க திமுக வேட்பாளர் கலா நிதி வீராசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகளில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கருணாநிதி, ஆர்.செல்வகுமாரி ஆகியோரும் பேசினர். முன்னதாக 10ஆவது வட்டச் செயலாளர் டி.சீனிவாசன் வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பி னர் எஸ்.காதர் உசேன் நன்றி கூறினார்.