tamilnadu

img

செங்கல் சூளையில் 5 வருடமாக கொத்தடிமை வேலை: கூலித் தொழிலாளர்கள் மீட்பு

ராணிப்பேட்டை, ஏப். 28 -  திருவண்ணாமலை மாவட்டம், மேல்சீசமங்கலம் கிரா மத்தில் வசித்து வந்த பழங்குடி வேட்டைக்கார இனத்தை சேர்ந்த சேட்டு-முனியம்மாள் தம்பதிக்கு 2 மகள்கள். இவர்கள் அனைவரையும் நாச்சி யார்புரத்தை சேர்ந்த குமார் ஆரணி தாலுகா விண்ண மங்கலம் கிராமத்தில் ஆற்று படுக்கை ஓரமாக செங்கல் சூளையில் செங்கல் அறுக்க 5 வருடத்திற்கு முன்பு, முன் பணம் ரூ.50,000 கொடுத்து குடும்பத்துடன் அழைத்துச் சென்றுள்ளனர். நாளொன்றுக்கு 1000 முதல் 1500 செங்கல் என வாரத்திற்கு சராசரியாக 7000 செங்கல் வரை அறுத்துள்ளனர். அதற்கு வாரம் ஒருமுறை 1000 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் முன் பணமாக கொடுத்த 50,000-த்திற்கு மாதம் ரூ. 1500 வட்டிப் பணம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில், சூளையில் வேலை செய்துக் கொண்டி ருந்த முனியம்மாளின் கணவர் சேட்டு  விபத்தில் சிக்கினார். அவர் சில மாதங்களுக்கு  பின்னர் மரணமடைந்து விட்டார். அந்த விபத்தின்போது, படுகாய மடைந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக சேட்டுவின் கணக்கில் வரவு வைத்துள்ளார் செங்கல் சூளை உரிமையாளர். முனியம்மாளும் அவ ரது மகள்களும் ஒருநாளைக்கு ஆயி ரம் செங்கல் அறுத்துள்ளனர். ஆனாலும் வாரம் ஒருமுறை ரூ. 500 முதல் 1000 மட்டுமே செங்கல் சூளை உரிமையாளர் கொடுத்தாக கூறப்படுகிறது.

ஐந்து வருடத்தில் முறையாக கூலி வழங்காதது குறித்து கேட்டதற்கு, இரண்டு லட்சம் பாக்கி வைத்துள்ளதாவும் அதற்காக மாதம் ரூ. 6000 வட்டி பிடித்தம் செய்துக்கொள்வேன் என்றும் முனியம்மாளிடம் கூறியுள்ளார்.  இது மட்டுமின்றி, முனியம் மாவை வெளியில் எங்கும் செல்லக்கூடாது. இதுகுறித்து யாரிடமும் தகவல் சொல்லக் கூடாது. அப்படியே வெளியில் செல்ல வேண்டும் என்றால் கடனாக எழுதி வைத்திருக்கும் முழு பணத்தை கொடுத்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.  இந்த தகவல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராணிப் பேட்டை மாவட்டம், கலவை வட்டம், சேன்னலேரி கிளைச் செயலாளர் சரோஜாவிடம் முனி யம்மாளின் தங்கை செல்வி தெரிவித்திருக்கிறார். இதனை யடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கலவை தாலுகா செய லாளர் எஸ். கிட்டு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, சேன்ன லேரி கிளைச் செயலாளர் சரோஜா, சேத்துப்பட்டு வட்டக்குழு உறுப்பினர்கள் சேகர், தங்கமணி ஆகியோர் சேத்துப்பட்டு காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தனர். பிறகு, பேச்சுவார்த்தை நடத்தி முனியம்மாள் அவரது மகள் கல்பனா, பேரன் நிதின் ஆகியோரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.