சென்னை,மார்ச்.11- ரத்ததானமும் உடல்உறுப்பு தானத் திற்கு நிகரானது என்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் ரத்தவங்கித் துறை தலைவர் என்.இராஜகுமார் கூறி னார்.மனிதநேயர் தோழர் ம.மீ.ஜெயிலா னின் 9ஆம் ஆண்டு நினைவு ரத்த தான முகாம் சென்னை மாதவரம் அலெக்ஸ்நகரில் உள்ள எங்க வாப்பா வீட்டில் ஞாயிறன்று (மார்ச் 10) நடை பெற்றது. இதில் பங்கேற்ற ரத்தவங்கித்துறை தலைவர் மருத்துவர் என்.ராஜகுமார் பேசுகையில், ஒரு மனிதர் உயிரோடு இருக்கும் போதே சகமனிதருக்கு தனது உயிர்த்துளியான ரத்தத்தை கொடுப்பது கூட உடல் உறுப்பை கொடு ப்பதற்கு சமமானது.
தமிழ்நாட் டில் குருதிக்கொடையாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயா ளிகளின் உயிர் பாதுகாக்கப்படுகிறது. இதில் ஸ்டான்லி மருத்துவமனையின் பங்கு மகத்தானது.ரத்ததானம் குறித்து பொதுமக்கள் மத்தியில் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது.
மாதவரத்தில் உள்ள எங்க வாப்பா வீட்டு குடும்பத்தார் இல்ல நிகழ்வு களில் இதுபோன்று ரத்ததானமுகாம் நடத்துவது மனநிறைவை ஏற்படுத் துகிறது என்றார். அரசு ஸ்டான்லி மருத்துவமனை யின் உடற்கூறு பேராசிரியர் டி.ராஜா பேசுகையில், மனிதனின் மரணம் தவிர்க்கமுடியாதுதான். ஆனால் அவர் மறைந்தாலும் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அவர் வாழும் சூழலை இந்நிகழ்வு ஏற்படுத்துகிறது.
இந்தியாவிலேயே உடற்கூறு தானம் வழங்குவதில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. எங்க வாப்பா வீடு என்கிற இந்த இஸ்லாமியர் குடும்பத் தில் மனிதநேயர் ஜெயிலான் அவர்க ளின் நினைவாக ஆண்டுதோறும் ரத்த தானமுகாம் நடத்துவது மிகச்சிறந்த முயற்சியாகும். உடற்கூறு தானம் வழங்குவதன் மூலம் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கப்படுகிறது. 100 குருதிக்கொடையாளர்களையும், 50க்கும் மேற்பட்ட உடற்கூறு கொடை யாளிகளையும் ஒருசேர சங்கமிப்பது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்றார்.
லயோலா பேராசிரியர் லெனின் பேசுகையில், 32ஆண்டுகளுக்கு முன்பு பெரியாரிய சிந்தனையாளர் தனது உடலை தானம் செய்தார். ஆனால் இறப்புக்கு பிறகு அவரது உடலை ஏற்று க்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் போராட்டம் நடத்திய பின்னரே அரசு உடல் தானமாக பெறப்பட்டது. தற்போது அந்த கடினமான நிலைகள் மாறிவிட்டன. இறுதியில் மண்ணுக்கு உடலை தின்னக்கொடுப்பதை விட சகமனிதனுக்கு கொடுப்பது மிக உன்னதமானதாகும்.
அந்த பணியை இந்த குடும்பம் சிறப்பாக செய்து வருவதற்கு வாழ்த்துக்கள் என்றார். டாக்டர் ரூத்ஜெனிலா, உடற்கூறு தானத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் தேவைகள் குறித்து விளக்கி பேசினார். மார்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தலைவர்கள் இரா.முரளி, சி.திரு வேட்டை, கவுன்சிலர் ஆர்.ஜெயராமன், வி.ஜானகிராமன், ராணி, பாக்கியம், சரவணதமிழன், கொளத்தூர் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, திமுக மண்டலக்குழு தலைவர் நந்த கோபால், பத்திரிகையாளர்கள் ஜோதி ராமலிங்கம், கிரிதரன், பழனியப்பன், ஆய்வு மாணவிகள் அஸ்வீனாஜீனத், மாபூபீ, வழக்கறிஞர்கள் வீ.ஆனந்தன், ஷினு, அறிவுக்கரசி உள்ளிட்ட பலர் பங்கேற்று தோழர்ஜெயிலன் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.