tamilnadu

img

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான பாஜக அரசு... ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை:
தொடர்ந்து 9 காலாண்டுகளாக பொருளாதார வீழ்ச்சிக்கும், 2020-2021 நிதியாண்டில் ஏற்பட உள்ள பொருளாதார பின் னடைவுக்கும் பாஜக அரசு தான் காரணம் என்று ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம் பரம், மத்திய அரசின் பொருளாதார அணுகுமுறையை விமர்சித்து ‘டுவிட்டர்‘ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகளை கேலி செய்தவர்கள், தங்களது அறியாமையையும், திறமையின்மையையும் பார்த்து பொருளாதார நிபுணர் கள் சிரிப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 2015-ம் ஆண்டில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்ன செய்தது?தொடர்ந்து 9 காலாண்டுகளாக பொருளாதார வீழ்ச்சிக்கும், 2020-2021 நிதியாண் டில் ஏற்பட உள்ள பொருளாதார பின்னடைவுக்கும்தான் காரணமாக இருந்தது. ஆனால், 2005-ம் ஆண்டுக்கும், 2015-ம் ஆண்டுக்கும் இடையே 27 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஆக்ஸ்போர்டு ஆய்வு கண்டறிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;