tamilnadu

img

மதக் கலவரத்தை தூண்டும் பாஜக தேர்தல் அறிக்கை: ஆர். நல்லகண்ணு சாடல்

சென்னை, ஏப். 10-

காந்தியை சுட்டுக் கொன்றவர்கள் தற்போது அம்பேத்கர், பெரியார் சிலையை சேதப்படுத்துகிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா தெரிவித்தார். திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென் சென்னை வேட்பாளர் சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து தி.நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கோடம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தொகுதிச் செயலாளர் கே.ஏழுமலை தலைமை தாங்கினார்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆர்.நல்லகண்ணு பேசுகையில்,“மதவெறி பாஜகவை வீழ்த்த வேண்டும், மதச்சார்பற்ற முற்போக்கு ஆட்சி அமைய வேண்டும், ஏழை, எளிய உழைப்பாளி மக்கள், விவசாயிகள், மாணவர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்று திமுக இடதுசாரிகளின் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.


பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை பற்றி கவலைப்படாமல், ராமருக்கு கோயில்கட்டுவோம் என மக்களை பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்பதற்காக மதக் கலவரங் களை தூண்டி விடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.தேசியச் செயலாளர் து.ராஜா பேசும்போது,“இந்து-முஸ்லிம் என பிரித்து பார்க்கக் கூடாது என்று கூறியதற்காக காந்தி சுட்டுக் கொல்லப் பட்டார். அந்த கும்பல் இன்றைக்கு அம்பேத்கர், பெரியார் சிலையை சேதப்படுத்துகிறார்கள்” என்றார்.இந்தியாவின் வளங்கள், கல்வி, சுகாதாரம், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போயுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே பாஜகவும், அதற்கு துணை போகும் கூட்டணிக் கட்சிகளையும் மக்கள் இந்த தேர்தலில் புறக் கணிக்க வேண்டும் என்றார்.சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் அ. பாக்கியம், டி.ராஜேந்திரன் (காங்கிரஸ்), சிபிஐ செயலாளர் ஏழுமலை, ரமேஷ் (விசிகே) உள்ளிட்டோரும் பேசினர்.

;