tamilnadu

img

சிறந்த பொறியியல் கல்வி நிறுவனம்: விஐடிக்கு குடியரசுத் தலைவர் விருது

வேலூர், ஏப்.10- புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர் மேம்பாடு ஆகியவற்றைச் செயல்படுத்தி வருவதில் நாட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் விஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதற் கான விருதை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார். இதுகுறித்து விஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுதல், தொழில் முனைவோர் மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு நடத்தி, உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடு குறித்த தரவரிசைப் பட்டியலை தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை கட்டமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் சாதனை படைக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அடல் ரேங்கிங் இன்ஸ்டிடியுஸன்ஸ் ஆன் இன்னவேசன் அச்சீவ் மென்ட் என்ற பெயரில் 10 அரசு உயர் கல்வி நிறுவனங்களுக்கும், 5 தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் விருது வழங்க இந்த ஆண்டு நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் உயர் கல்வி நிறுவனங்கள், தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் என இரு வகையாகப் பிரித்து பல மாதங்களாக ஆய்வு செய்து தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து தேர்வு செய்துள்ளது.இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு விருது வழங்கி கவுரவித்தார். இதில், வேலூர் விஐடி பல்கலைக் கழகத்துக்கு வழங்கப்பட்ட விருதை விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன் பெற்றுக் கொண்டார்.

;