tamilnadu

img

மதுபான கடையை மூட கோரிய மக்கள் மீது தடியடி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருவள்ளூர், மே 8- மதுபானக்கடையை மூடக்கோரியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சி யின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று பர வலில் திருவள்ளூர் மாவட் டம் சிவப்பு மண்டல பட்டி யலில் உள்ளது. இருப்பி னும், மாவட்டத்தில் உள்ள 132 அரசு மதுபானக் கடை யில் தொற்று இல்லாத  பகுதிகளில் உள்ள 40 கடை கள் திறக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூரில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை யில், எவ்வித சமூக இடை வெளியும் பின்பற்றாமல் மதுக் கடையில் மது வாங்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர். இதனால் தொற்று பரவல் மேலும் அதி கரிக்கும். எனவே, திறக்கப்  பட்டுள்ள மதுக்கடைகளை உடனடியாக மூடவேண்டும். ஊத்துக்கோட்டை வட் டம், மெய்யூரில் உள்ள மது பான கடையில் (எண்  9052)  வெள்ளியன்று (மே-8) காலை யிலேயே மதுவாங்க ஆயி ரக்கணக்கில் மக்கள் கூடி  உள்ளனர். எனவே, கடையை  திறக்க கூடாது, தொற்று பர வும் அபாயம் உள்ளதாக கூறி  அரசு அதிகாரிகள், காவல் துறையினரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டுக் கொண்டிருந்தனர்.

அச்சமயம் அங்கு வந்த பேரிடர் மேலாண்மை குழு பாதுகாப்பு படையினர் மக்கள் மீது சரமாரியாக தடி யடி நடத்தினர். ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத்  தலைவர், துணைத் தலைவர்,  13 பெண்கள் உட்பட 25 பேரை கைது செய்து பெரிய பாளையம் காவல் நிலை யத்திற்கு கொண்டு சென் றுள்ளனர். காவல்துறையின் இந்த அராஜக செயலை  வன்மையாக கண்டிக்கி றேன். கைது செய்யப்பட்ட வர்களை உடனடியாக விடு தலை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

;