சென்னை:
பெங்களூரில் மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க வேண்டிய 3 விமானங்கள் சென்னையில் தரையிறங்கின.சென்னை விமான நிலையத்தில் புதனன்று (நவ.4) காலையில் பெங்களூரில் தரையிறங்க வேண்டிய லண்டனிலிருந்து 166 பயணிகளுடன் பெங்களூரு சென்ற பிரிட்டிஷ் ஏா்லைன்ஸ், தில்லியிலிருந்து 81 பயணிகளுடன் பெங்களூரு சென்ற தனியார் விமானம், சென்னையிலிருந்து 137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற விமானம் என 3 விமானங்கள் அங்கு வானிலை மோசமான காரணத்தால் சென்னையில் தரையிறங்கியது.பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமரவைக்கப்பட்டனா். அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளை அந்தந்த விமான நிறுவனங் கள் செய்து கொடுத்தன.பின்னர், வானிலை சீரடைந்தபின்பு விமானங்கள் புறப்பட்டு சென்றன.