tamilnadu

img

கனவு நிறைவேறியது மகிழ்ச்சி: நகைச்சுவை நடிகர் முத்துகாளை!

சென்னை, டிச.25- விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையத்தில் பிறந்தவர் முத்துக் காளை. 58 வயதாகும் அவர், தமிழ்  திரைப்பட நகைச்சுவை கலைஞராக  நடித்து வருகிறார். பல்வேறு திரைப் படங்களில் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகரானார்.

தனது 18 ஆவது வயதில் கராத்தேவில் கருப்பு பட்டை பெற்றதும், திரைப்படத்தில் சண்டை பயிற்சியாளராக வேண்டும் என்று சென்னைக்கு வந்தார். 1997 ஆம் ஆண்டில் வெளியான பொன்மனம் திரைப்படம் மூலம் அறிமுகம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வைகை புயல் வடிவேலுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கலைஞராக நடித்து புகழ் பெற்றவர்.

 இந்நிலையில்,  பி.லிட் தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு தேர் வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றி ருக்கிறார். ஏற்கெனவே இவர், தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் 2017 ஆண்டில் பிஏ இளங் கலை வரலாற்றில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 2019 இல்  முதுகலை எம்ஏ தமிழ் இலக்கியத் தில் முதல் வகுப்பு தேர்ச்சியும் பெற்றார். இந்த நிலையில் பி,. லிட்  தமிழ் இலக்கியம் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக் கிறார்.

இதன் மூலம், தான் ஒரு பட்டதாரி  ஆக வேண்டும் என்ற கனவு நிறை வேறியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.