tamilnadu

img

விழிப்புணர்வு ஊர்வலம்

எல்ஐசி நிறுவனத்தின் 63-ஆவது ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை வடக்கு காவல் உதவி ஆய்வாளர் விநாயகம் தொடங்கி வைத்தார். எல்ஐசியின் வேலூர் கோட்ட முதுநிலை மேலாளர் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வணிக மேலாளர் ஜி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பேரணியில் காப்பீடு குறித்த பாலிசி திட்டங்கள், நலத்திட்டங்கள் அடங்கிய விளக்கக் கையேடும் விநியோகிக்கப்பட்டன. பேரணியில், எல்ஐசி அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் பங்கேற்றனர்.