சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையம் கடந்த 2012 ஆம் ஆண்டு புதிதாககட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது சென்னை விமானநிலையத்தில் ஆண்டுக்கு 22 மில்லியன் பயணிகள் வந்து செல்கின்றனர். விமான நிலையத்தில் 35 நடைமேடைகள் உள்ளது.பழைய முனையங்க ளான அண்ணா மற்றும் காமராஜர் முனையங்கள் இடிக்கப் பட்டு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணி இன்னும் ஒரு ஆண்டில்முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் எனகூறப்படுகிறது. அப்போது ஆண்டுக்கு பயணிகள் எண்ணிக்கை 35 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் பயணிகள் குறைந்த நேரத்தில் விமான நடைமேடைக்கு செல்லவும், உடைமைகள் தாமதமின்றி செல்லவும் விமான நிலைய அதிகாரிகள் புதிய திட்டத்தை தயாரித்து இந்திய விமான ஆணையக அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளனர்.அதில் சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய சாட்டிலைட் முனையம் அமைக்கவேண்டும். இந்த முனையம் அமைத்தால் ஆண் டுக்கு 50 மில்லியன் பயணிகள் வரை கையாள முடியும்.அப்போது 66 விமான நடைமேடைகள் தேவைப்படும். சாட்டிலைட் முனையத்தில் 41 நடைமேடைகள் இருக்கும். இந்த முனையம் முதல் மற்றும் 2-வது ஓடுபாதைக்கு நடுவே அமைக் கப்பட உள்ளது.இது அனைத்து நவீன வசதிகள் கொண்டதாக இருக்கும். வருகை, புறப்பாடு மற்றும்போர்டிங் பகுதியாக 3 கட்டங்களை கொண்டகட்டிடமாக இருக்கும்.
தற்போது உள்ள முனையத்தில் இருந்து புதியதாக அமைய உள்ள சாட்டிலைட் முனையத்திற்கு பயணிகள் செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம்பூமிக்கடியில் கேபிள் கார் ரயில் அமைக் கப்படும். இந்த ரயில் ஓடுபாதையின் கீழ்
செல்ல கூடியதாக இருக்கும். இந்த ரயில்40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.இந்த ரயில் முக்கிய முனையத்தில் இருந்து சாட்டிலைட் முனையத்துக்கு 3-ல் இருந்து 4 நிமிடத்திற்குள் சென்றடையும். 5 பெட்டிகள் கொண்ட 2 கேபிள் கார் ரயில்பயன்படுத்தப்படும். ஒரு ரயிலில் ஒரே நேரத்தில் 400 பயணிகள் செல்ல முடியும்.இந்த திட்டங்களுக்காக ரூ.2,665 கோடிசெலவாகும் என திட்டமிடப்பட்டுஉள்ளது.சாட்டிலைட் முனையம், பூமிக்கடியில்கேபிள் கார் ரயில் அமைக்க அப்பகுதியில் உள்ள நிலம் தகுதியானதா? என்று ஆய்வுசெய்யப்படும். விரிவாக்க முனைய கட்டிடபணிகள் முடிவடைந்த பின்னரே சாட்டிலைட் முனையத்திற்கான பணிகள் 3 ஆண்டுக்குள் தொடங்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.